முருகதாஸே நடிக்க அழைத்தும் வர மறுத்த நயன்தாரா பட நடிகர்..! யார் அவர்.? என்ன காரணம் தெரியுமா..?

0
249
ar-murugadoss

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும், ஒரு சில இயக்குனர்களுடன் பணிபுரியவே பல முன்னணி நடிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸும் ஒரு மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்றே கூறலாம்.

imaikkaa-nodigal

ஆனால், ஏ ஆர் முருகதாஸே, ஒரு நடிகருக்கு தமிழ் சினிமாவிற்கு வரும்படி வரவேற்பை விடுத்துள்ளார். அது வேறு யாருமில்லை இந்தி நடிகர் அனுராக் காஷ்யுப் தான். இந்தியில் இயக்குனர். எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக கலைஞராக இருந்து வருபவர் நடிகர் அனுராக் காஷ்யுப்.

சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த “இமைக்கா நொடிகள் ” படத்தில் வில்லன் நடிகராக நடித்திருக்கிறார் அனுராக் காஷ்யுப். முதல் தமிழ் படம் என்றாலும் தனது கதாபாத்திரத்தில் பொருந்தி தனது மிரட்டலான நடிப்பின் மூலம் ஆசாத்தியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் “இமைக்கா நொடிகள் ” படத்தை பார்த்துவிட்டு அனுராக் காஷ்யுப்பை பாராட்டிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் “சார், நீங்கள் ஏன் இன்னும் மும்பையில் இருக்கிறீர்கள் ? இது நீங்கள் சென்னைக்கு வரும் நேரம், தியேட்டரில் உங்களுக்கு என்ன கைதட்டல், அவ்வளவு விசில். தமிழ் சினிமாவிற்கு உங்களை போன்ற வில்லன் தேவை” தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.