சங்கர் மாதிரி Matureஆ இருப்பாங்கனு நெனச்சேன் ஆனா Cringeஆ இருக்காங்க – ரசிகரின் கமென்டிற்கு அதிதி அளித்த விளக்கம்.

0
1570
Shankar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கிஇருந்தார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருந்தார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார். ந்த படத்தின் மூலம் தான் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியான போதே அதிதி இளசுகள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது.முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகை போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார். அதிதி அதேபோல அதிதி படபிடிப்பு தளத்தில் மிகவும் சுட்டித்தமான நடந்ததாக இந்த படத்தில் பணியாற்றிய கார்த்தி, சூரி போன்ற பலர் கூறியிருந்தார்கள்.

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி அதித்தி மொக்க ஜோக்கை போட்டு தங்களை வறுத்து எடுத்ததாகவும் சூரி மற்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதே போல விருமன் படத்திற்கு பின்னர் அதிதி பல பேட்டிகளில் பங்கேற்று இருந்தார். அதில் கூட படு சுட்டித்தனமாகவே பேசியதோடு பல மொக்கை ஜோக்குகளை கூறி இருந்தார் அதிதி. விரும்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிதி மொக்கை ஜோக்கை கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் இந்த படத்தின் வெற்றி விழாவில் சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும் மண்டை அன்னிக்கு மண்ட போட முடியுமா’ என்று மதுரை முத்துவையே மிஞ்சும் அளவிற்கு கடி ஜோக்கை கூறியிருந்தார். அதிதியின் இந்த ஜோக்கை பலரும் பாராட்டினாலும் அதிதியின் இந்த செயல்கள் எல்லாம் Cringeஆகவே இருக்கிறது என்று பலர் கூறி வந்தனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதியிடம் அவருக்கு வந்த சில கமெண்டுகளை படித்து காண்பித்தனர்.

அதில் ஒரு கமெண்டில் ” என்று ரசிகர் ஒருவர் கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த அதிதி ‘ எங்க அப்பாவிற்கு என்ன வயசு ஆகிறது எனக்கு என்ன வயசு ஆகிறது. நான் என்னுடைய வயதிற்கு ஏற்றார் போல தான் இருக்க முடியும். நானும் சீரியஸாக பேசினால் நீங்கள் பார்ப்பீர்களா ? இல்லையே. என் அப்பா, அப்பா மாதிரி இருப்பார் நான் என்னை மாதிரி தானே இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement