நடிகையாகும் முன்னே பாடகியான அதிதி, இதோ அவர் பாடிய முதல் பாடலின் வீடியோ. வாய்ஸ் எப்படி இருக்கு சொல்லுங்க.

0
683
Aditi
- Advertisement -

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி பாடகியாக சினிமா உலகில் அறிமுகமாகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த சூழ்நிலையில் தற்போது இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது.

- Advertisement -

விருமன் படம்:

கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் சில மாதங்களில் விருமன் படம் திரைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிதி நடிக்கும் படம்:

இதனிடையே இயக்குனர் சங்கரின் மகள் அதிதிசங்கர் டாக்டர் படிப்பை படித்து முடித்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு தான் அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிதி சங்கருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கும் கொரோனா குமார் என்ற படத்திலும் நடிகை அதிதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

-விளம்பரம்-

தெலுங்கில் பாடி இருக்கும் அதிதி:

இப்படி படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் அதிதி நடித்த படங்கள் திரைக்கு வரும் முன்னே அவர் தற்போது பாடகியாக அறிமுகமாகியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் கிரண் கொர்ரபதி இயக்கத்தில் வருண் தேஜ் நடித்துள்ள படம் ‘கானி’. இந்த படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை அதிதி சங்கர் தான் பாடியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அதிதி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கூறியிருப்பது,

வைரலாகும் அதிதி டீவ்ட்:

இது என்னுடைய முதல் பாடல் இது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். என்னுடைய மற்றொரு கனவு நனவாகி விட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி தெலுங்கு சினிமாவில் பாடகியாக அதிதி அறிமுகமாகி உள்ள தகவலை ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

Advertisement