அவரை கைது செஞ்ச மாதிரி பார்வதியையும் கைது செய்யுங்க – நெட்டிசன்கள் ட்வீட்.

0
2790
Vjparvathy

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

Vj பார்வதி பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.அது போக பல பொது மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராக இருந்துள்ளார். பொது இடங்களில் வரும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் மாதவிடாய், ஆணுறை, உடல் உறவு என்று பல்வேறு விடயங்கள் குறித்து கேள்வி கேட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரது வீடியோக்களை பார்க்க ஒரு தனி கூட்டமும் இருக்கத்தான் செய்தது.

இதையும் பாருங்க : இதுக்கு முன்னாடி இப்படி அசிங்கப்பட்டது இல்லை – சுரேஷ் சக்கரவர்த்தி வருத்தம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பார்வதியை கைது செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே, சமீபத்தில் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்யப்பட்டது தான் காரணம். சில வாரங்களுக்கு முன் 2020 எப்படி போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் Chennai Talk என்ற சேனலை சேர்ந்த நபர் ஒருவர் பேட்டி எடுத்தார்.

அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.இப்படி ஒரு நிலையில் இதே போன்று பார்வதியும் பலரிடம் ஆபாசமாக பேட்டி எடுத்துள்ளதாகவும் எனவே, அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement