லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து தன் அடுத்த படத்தின் ஹீரோவுடன் புகைப்படம் வெளியிட்ட மைனா. கலக்குறாங்க போங்க.

0
942
vikram
- Advertisement -

மைனா என்று சொன்னவுடனே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது விஜய் டிவி சீரியல் நடிகை மைனா நந்தினி தான். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவர் மதுரையை சேர்ந்தவர். மேலும், இவர் சின்னத்திரையின் மூலம் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடைய வட்டார மொழி பேச்சு மூலம் சுலபமாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். ஆனால், தன்னுடைய டஸ்கி ஸ்கின்னால் வெற்றி அடைய முடியவில்லை. அதற்கு பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி கலக்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

சினிமாவிலும் பறந்த மைனா :

சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார் மைனா. இவர் முதன் முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்த மைனா, இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் நடித்து இருந்தார்.

- Advertisement -

கமலின் விக்ரம் படத்தில் மைனா :

இப்படி ஒரு நிலையில் தான் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.இந்த தகவல் வெளியானதில் இருந்தே விஜய் சேதுபதிக்கு ஷிவானி ஜோடியா என்று பலர் கேலி செய்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குல் இந்த படத்தில் மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் கமிட் ஆக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அது வேறு யாரும் இல்லை விஜய் டிவி மைனாவும், பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரியும் தான்.

கார்த்தி படத்தில் மைனா :

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னர் அப்பாக வந்த மைனா தற்போது அடுத்த படத்தில் கமிட் ஆகி இருகிறார். அதுவும் கார்த்தி படத்தில். சுல்தான் படத்திற்கு பின்னர் நடிகர் கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார். ‘கொம்பன்’ முத்தையாவுடன் கார்த்தி மீண்டும் கூட்டணி அமைத்து நடித்து வரும் படம் ‘விருமன்’. இதில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், மனோஜ் பாரதிராஜா, கருணாஸ், சூரி, ராஜ்கிரண் எனப் பலரும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகை மைனா நந்தினி கமிட் ஆகி இருக்கிறார். இதனை உறுதி செய்யும் விதமாக மைனா நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கார்த்தியின் விருமன் :

Director Shankar's daughter Aditi to make acting debut with 'Viruman'

ஏற்கனவே கமல் படத்தில் கமிட் ஆன நிலையில் தற்போது கார்த்தி படத்தில் மைனா நந்தினி கமிட் ஆகி இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விருமன் படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. தேனி பகுதியில் பிரமாண்ட திருவிழா செட் அமைத்து, பாடல் காட்சியும் படமாக்கியுள்ளனர். தவிர, ஹீரோ கார்த்தியின் வீடு, ஒன்று ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்டது. அதைவிட இன்னொரு செட் ஆன வீச்சரிவாளுடன் கூடிய அய்யனார் கோயில் தேனி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Advertisement