வெற்றி மாறன் படத்தின் மூலம் கதாநாயகியாக மாறிய ரம்யா. ஹீரோ யாரு தெரியுமா ?

0
22608
Ramya
- Advertisement -

சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for sanga thalaivan audio launch

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : துணை இயக்குனர் கூட இல்லை. ஆனால், பட குழுவில் ஓடி ஓடி வேலை செய்த இவர் யார் தெரியுமா ?

ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா. அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக ஆடை படத்தில் நடித்திருந்த ரம்யா, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை ரம்யாவிற்கு லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தலைவன் படத்தில் தான் ரம்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ஒரு குழந்தையின் தாயாக நடிக்கிறாராம் ரம்யா. இப்படத்தை மணிமாறன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார்.

Advertisement