மெர்சல், காலா படத்திற்கு பின்னர் சூர்யாவின் ‘NGK ‘ படத்திற்கு கிடைத்த பெருமை.!

0
461

இயக்குனர் செல்வராகவன் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என் ஜி கே திரைப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தற்போது எப்படியோ இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப் படம் எப்போது திரைக்கு வரும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு வீடு பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக என்ஜிகே திரைப்படத்திற்கு ஒரு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க : கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள சிபாரிசு.! மருத்துவர் கூறியதை ஸ்கீரீன் ஷாட்டாக வெளியிட்ட சின்மயி.!

- Advertisement -

அது என்னவெனில் இந்த படத்திற்கு டுவிட்டரில் எமோஜி ஒன்றை படக்குழுவினர் பெற்றுள்ளனர். அதாவது ட்விட்டரில் #NGK, #NGKFromMay31, #NGKFire என்று நீங்கள் டைப் அடித்தால் உடனே சூர்யாவின் அட்டகாசமான படத்துடன் கூடிய எமோஜி தோன்றும்.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக டுவிட்டரில் எமோஜி பெறும் வழக்கத்தை விஜய்யின் ‘மெர்சல்’ படம் தொடங்கி வைத்தது. அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் காலா திரைப்படமும் இந்த எமோஜி வழக்கத்தை பின்பற்றியது. அதனையடுத்து தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே படத்திற்கும் எமோஜி பெறப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement