வர்மா பட எதிரொலி.! 16 வருடம் கழித்து விக்ரம் படம் மூலம் விஸ்வரூபம் எடுக்கும் பாலா.!

0
860
Bala
- Advertisement -

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படத்தை பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், கடந்த 14 ஆம் தேதி இந்த படம் வெளியாவதாக இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்றும் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 நிறுவனம் அறிவித்தது. தற்போது இந்த படம் வேறு ஒருவர் இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராக இருக்கிறது.

இதையும் படியுங்க : வர்மா படத்தில் இருந்த ரைசா ஆதித்யா வர்மாவின் இல்லை.! அவருக்கு பதில் இவர் தான்.! 

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாலாவிற்கு இது மிகவும் ஒரு கௌரவ இழுக்காக அமைந்தது. அதே போல வர்மா பட விவகாரத்தில் விக்ரமுக்கும் பாலாவிற்கும் கூட சில மன சங்கடங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பாலா ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாவதற்குள் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறாராம். இதனால் விக்ரம் நடித்த ‘பிதாமகன் ‘ படத்தை இந்தியில் ரி-மேக் செய்ய இருக்கிறாராம் பாலா.

-விளம்பரம்-

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. மேலும், இந்த படத்திற்காக விக்ரமிற்கு தேசிய விருதும் கிடைத்து. தற்போது
16 வருடம் கழித்து மீண்டும் பிதாமகன் படத்தை ஹிந்தி ரீமேக் செய்ய இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement