பிரபல Rj வை நேரில் சந்தித்த அஜித்.. கேட்டவுடன் ஒப்புக்கொண்ட அஜித்.. வைரலாகும் புகைப்படம்..

0
9559
ajith

தமிழ் சினிமா திரை உலகில் மாஸ் காட்டும் ஹீரோக்களில் நம்ம “அல்டிமேட் ஸ்டார் அஜித்தும் ” ஒருவர். எப்பவுமே தல ரசிகர்கள் அஜித்தை நேரில் சந்திக்க முடியவில்லை என்றும், எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் அவரை பார்க்க முடியவில்லை என்றும் குறித்து தங்கள் சோகமான கருத்துக்களை தெரிவித்து வருவார்கள். மேலும், அவர் செய்யும் உதவிகள் , நிறைய நல்ல விஷயங்கள் கூட அவ்வளவாக வெளி வருவதில்லை என்ற பேச்சும் இணையங்களில் வரும். ஆனா, உண்மையில பார்த்தா, நம்ம தல அஜித் அப்படிப்பட்டவர் இல்லை என்பதை அவர் அடிக்கடி செய்யும் நல்ல விஷயங்களில் தெரிந்துவிடும். தல அஜித் எப்போதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் தன்னுடைய ஒரே மாதிரியான அன்பை வெளிக்காட்டுபவர்.

அதே மாதிரிதான் “வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக்கூடாது” என்ற பழமொழிக்கேற்ப தான் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் மறைத்து செய்வார். இவருடைய இந்த நல்ல குணத்திற்குக்கென்று ஒரு ரசிகர் படையே உள்ளது கூட சொல்லலாம்.அது மட்டும் இல்லைங்க நம்ம தல அஜித் அவர்கள் “வலிமை” என்ற ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்றும் அதற்கான பூஜைகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டது என்ற தகவலும் வெளிவந்துள்ளன. இந்த படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையும் பாருங்க : கவின் மற்றும் லாஸ்லியாவை அழைத்து விருந்து கொடுத்தாரா கமல் ?இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

- Advertisement -

மேலும், இந்த படத்தையும் வினோத் அவர்கள் இயக்க உள்ளார்.அதோடு யுவன், நீரவ் ஷா இவர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் தான் தல அஜீத்தின் தீவிரமான ரசிகையான பிரபல ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றுபவர் ஆர்.ஜே. சுலபா. இவர் எதிர்பாராதவிதமாக தல அஜித்தை சந்தித்தார். பின்பு சுலபா தல அஜித் அவர்களை பார்த்த சந்தோஷத்தில் செல்பி எடுத்துக் கொள்ளலாமா சார் என்று கேட்டேன். உடனே அஜித் அவர்கள் எதுவுமே சொல்லாமல் என்னுடைய மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்தார்.

தற்போது ஆர்.ஜே.சுலபா தன் குடும்பத்தோடு அஜித் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இது போட்டோ பயங்கரமாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது குறித்து ஆர்.ஜே.சுலபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, அஜித்தின் குணாதிசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மேலும், உன்னதமான, நியாயமான மனிதருக்கு இலக்கணம் என்று பார்த்தால் “தல அஜித்” தான் என்று கூறியிருந்தார். நான் அஜித்திடம் செல்ஃபி எடுக்கலாமா? என்று கேட்டவுடனே மறுப்பு தெரிவிக்காமல் ‘ வலிமை; படத்தின் கெட்டப்பில் இருக்கும் போதே செல்ஃபி எடுத்தார்.

எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியாத விஷயமாகும்.எல்லா நடிகர்களும் வெயிட் பண்ணுங்க,சூட்டிங் முடிச்சுட்டு வரேன், அப்புறம் எடுக்கலாம் என்று சொல்லுற இந்த கால நடிகர்களில் நம்ம தல வேற லெவல் என்று கூறி இருந்தார் ஆர்.ஜே.சுலபா.இந்த போட்டாவை பார்த்த தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.மேலும்,இந்த போட்டாவை அதிகமாக பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

Advertisement