அவன அகோரின்னு சொல்லாதீங்க,ஊரில் தலை காட்ட முடியல – கலையரசனின் சித்தப்பா ஆவேச பேட்டி

0
411
- Advertisement -

அகோரி கலையரசனை குறித்து அவருடைய சித்தப்பா அளித்து இருக்கும் ஆவேச பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் தன்னை அகோரி என்று கலையரசன் பேசும் வீடியோக்கள் தான் வைரலாக்கப்பட்டு வருகிறது. இவர் முதலில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து நாட்டுப்புற நடனமாடிய வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் பல மாணவர்களுக்கு சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற பல கலைகளை சொல்லிக் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

கலையரசனின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருக்கும் போது பறை இசைத்தப்படியே வெறும் காலில் டியூப்லைட்டை எல்லாம் மிதித்து சாதனை படைத்திருந்தார். அதை அவர் செய்ததற்கு காரணம், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் இந்த ஜோடிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதற்கு பிறகு சில காலங்கள் கலையரசன் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

- Advertisement -

அகோரி கலையரசன் குறித்த தகவல்:

திடீரென்று கடந்து சில வாரங்களாகவே கலையரசன் தன்னை அகோரி என்று சொல்லி அருள்வாக்கு கொடுத்து வருகிறார். இவரை பல youtube சேனல்கள் பேட்டி எடுத்தும் வருகிறது. அதோடு இவருடைய மனைவியும் தன் கணவருக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதில் இவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயங்கள் தான் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. சிலர் அவருக்கு ஆதரவு கொடுத்தாலும் பல பேர் கலையரசனை திட்டியும் விமர்சிக்கும் வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல youtube சேனலுக்கு கலையரசனின் சித்தப்பா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் வைரலாகி வருகிறது.

சித்தப்பா பேட்டி:

அதில் அவர், நான் கலையரசன் உடைய சித்தப்பா. அதாவது என்னுடைய அண்ணன் மகன் தான் கலையரசன். ஊரே ஒதுக்கி வைத்திருப்பதாக அவன் சொல்கிறான். அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவன் பறை கலையை வளர்க்க வேண்டும் என்று தான் ஊரை விட்டு வெளியேறினான். அவருடைய அப்பா கலையை வளர்த்தவர். அதன்படி தான் அவனும் கலையை வளர்க்க போனான். கலையையும் நன்றாக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். இதற்காக அவன் டாக்டர் பட்டம் கூட வாங்கி இருக்கிறான்.

-விளம்பரம்-

கலையரசன் குறித்து சொன்னது:

அதெல்லாம் நினைத்தபோது நாங்கள் ரொம்ப பெருமை பட்டோம். ஆனால், திடீரென்று தான் அகோரி, அருள்வாக்கு சொல்கிறேன், சாமியாடி ஆடுகிறேன் என்றெல்லாம் சொல்வதெல்லாம் பொய். இதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நானும் ஒரு சாமியாடி தான். திருவிழா நேரத்தில் தான் நான் அருள்வாக்கு சொல்வேன். மற்ற நேரங்களில் எல்லாம் இப்படி அருள்வாக்கு சொல்வது கிடையாது. அவன் சும்மாவே அருள்வாக்கு சொல்கிறேன் என்று பேசி கொண்டிருக்கிறான். அவர் ஒரு துண்டு கட்டி, காலை மடக்கி உட்கார்ந்து திருநீரை பூசி, ஜடையை வைத்துக்கொண்டால் அகோரி ஆகி விடுவானா? எந்த அகோரி பேப்பரில் எலும்பு துண்டை வைத்து சாப்பிடுகிறார்.

அகோரி கலையரசன் குறித்த விமர்சனம்:

அவன் அகோரி என்று அவன் செய்யும் வேலையால் எங்களால் ஊரில் தலை காட்ட முடியவில்லை. அதேபோல் அவன் சாபம் விட்டால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்று சொல்கிறான். அவனை எனக்கு சாபம் விட சொல்லுங்கள். நான் இறந்தேன் என்றால் அவன் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சும்மா ஊரை ஏமாற்றி அகோரி என்று சொல்லி உண்மையான அகோரிகளின் பெயர்களை கெடுக்கக் கூடாது. இதற்கு மீறியும் அவன் இப்படி பண்ணான் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று பேசுகிறார். இவரை எடுத்து youtube சேனல், கலையரசனின் குடும்பத்தினர் சில பேருக்கு போன் மூலம் விசாரித்திருக்கிறார்கள். அவர்களும் பயங்கரமாக கலையரசனை திட்டி பேசி இருக்கிறார்கள்.

Advertisement