சூரரை போற்று படத்தை பார்த்துவிட்டு ஏர் டெக்கான் ஓனர் போட்ட பதிவு. சூர்யா நன்றி

0
55881
surarai-potru

பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.

- Advertisement -

இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.கொரோனா பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் திரைப்படம் அமேசான் Ott தலத்தில் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர் பார்புகளை பெரிதும் பூர்த்தி செய்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்து விட்டு டெக்கான் உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார். அதில், பெரும் முரண்பாடுகளில் பின்தங்கிய கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியின் அழியாத ஆவிக்கு நாடகமாக்கப்பட்டது, ஆனால் உண்மை.

கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனமாக இருந்த ஒரு தொழில்முனைவோரின் பகுதியை சூர்யா மிகவும் பலமாக எடுத்து சென்று இருக்கிறார். இருண்ட இந்த காலங்களில் ஒரு சரியான மற்றும் சிறந்த மேம்பட்ட கதை என்று பதிவிட்டுள்ளார்.கோனாத்தின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா, அன்புள்ள கேப்டன்!
அன்புள்ள கேப்டன்! உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது !!!! நீங்கள் நம்பியதற்கும் எங்கள் நாட்டிற்காக நீங்கள் செய்ததற்கும் மரியாதை செலுத்துவதற்கான எங்கள் சிறிய வழி. இன்னும் மேலும் மேலும் எங்களை ஊக்கவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement