தாமதமாகும் வலிமை பட அப்டேட். கடுப்பாகி காணவில்லை போஸ்ட்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்.

0
1217
valimai
- Advertisement -

வலிமை அப்டேட் தாமதமாவதால் அஜித் ரசிகர்கள் ‘காணவில்லை’ என்ற போஸ்டரை அடித்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டு இல்லாமல் இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.இப்படி படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருக்கிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

வலிமை படத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாக இருக்கிறது. ஆனால், வலிமை படத்தின் போஸ்ட்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் படத்தின் நாயகன் அஜித் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement