செத்துடுவேன்னு சொன்ன ரசிகர் – பதிரிப்போய் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.

0
1350
aishwarya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். இவர் இறுதியாக லீட் ரோலில் நடித்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

❤️❤️❤️Clicked @antonyfernandophotography

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on

டிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில்நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார் . தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.

இதனால் இவருக்கு தீவிர ரசிகர்களும் உருவாகியுள்ளனர். சமீபத்தில் ரசிகர் ஒருவர், நான் உங்களின் மிகப்பெரிய ரசிகர். உங்களுக்காக செத்துவிட கூடவும் தயார் என்று இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, ஷாக்கான ஐஸ்வர்யா ராஜேஷ்,மிக்க நன்றி ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் வாழ்க்கை என்பது சாவதற்காக கிடையாது நான் என்றும் உங்கள் நண்பராக இருக்கிறேன் ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement