தீணா படத்தில் ஏ. ஆர்.முருகதாஸிடம் அஜித் கேட்ட ஒரே ஒரு வேண்டுகோள்..! என்ன தெரியுமா..?

0
986

இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ் எடுத்த அனைத்து படமும் வெற்றி என்றே கூறலாம்.இவர் முதல் முதலில் எடுத்த அஜித் நடித்த தீனா படம் மாபெரும் வெற்றியடைந்து.அந்த படம் மூலம் தான் அஜித்துக்கு தல என்ற பெயரும் வந்தது, அந்த பெருமை ஏ. ஆர். முருகதாஸையே சாரும்.

dheena

2001 ஆம் ஆண்டு வெளிவந்த “தீனா” படத்தில் அஜித் ஒரு மாஸ் கலந்த ஹீரோவாக நடித்திருப்பார். அதுவரை காதல் நாயகனாக இருந்த அஜித் இந்த படத்திற்கு பிறகு தான் மாஸ் ஹீரோ என்ற படத்தை பெற்றார். பொதுவாக அஜித் தனது படங்களில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்று இயக்குனர்களிடம் வாதாடியதில்லை.

ஆனால் இந்த படத்தில் நடிகர் அஜித், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அது என்னவென்றால் இந்த படத்தில் தனது கழுத்தில் ஒரு செயின் ஒன்றை மட்டும் அணிய அனுமதி கேட்டுள்ளாராம். அதற்கு ஏ.ஆர் முருகதாஸும் சம்மதம் தெரிவித்துள்ளார். படம் வெளியாகி ஹிட்டானதும், அஜித் அணிந்திருந்த அந்த செயினும் அப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தது.

Ajith

அந்த படத்தை இயக்கிய ஏ. ஆர். முருகதாஸ் நண்பர் ஒருவர் அடிக்கடி தல என்ற வார்த்தையை பயன்படுத்துவாராம்.அதனால் தீனா படத்தில் நடிகர் அஜித் ஒரு மாஸ் ஹீரோ என்பதால் அவரை தல என்று அந்த படத்தில் அழைத்தார். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு தல என்று பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.