ட்விட்டரில் ட்ரெண்டான தல தளபதியின் மோசமான ஹேஷ் டேக். தலையில் அடித்துக்கொண்ட டாப்ஸி.

0
2379
thala-thalapathy
- Advertisement -

அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் வருகின்றது. மேலும், ரசிகர்களே இப்படி மாறி மாறி அசிங்கப் படுத்திக் கொள்வது இங்க தான் நடக்கும் என்றும் கூறிவருகின்றனர். சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் அஜீத்-விஜய். மேலும்,இவர்கள் 2 பேரும் தமிழகத்தின் மெகா சூப்பர் ஸ்டார் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு சினிமா துறையில் இவர்களுடைய படங்கள் எப்போதுமே பிளாக் பஸ்டர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் இன்னும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இது மட்டுமில்லாமல் அஜித் அவர்கள் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த ‘விசுவாசம், நேர்கொண்டபார்வை’ படம் மாஸ் காட்டி வருகிறது. இப்படி தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் ஆரம்ப காலத்திலிருந்தே இப்போது வரை அஜித்–விஜய் ரசிகர்கள் மாற்றி மாற்றி திட்டிக் கொள்வது வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-

இது சமீப காலமாக கொஞ்சம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும்,இவர்களில் இருந்து யாராவது ஒரு படம் வெளி வந்தால் போதும் இதை கொண்டாடும் விதமாக மாறி மாறி ரசிகர்கள் திட்டிக் கொள்வார்கள். இப்போது புதிதாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் விஜய்யை பற்றி தாறுமாறாக கேவலமாக புகைப்படங்களை போட்டும், விஜய் ரசிகர்கள் அஜித்தை பற்றி கேவலமாக புகைப்படங்களை போட்டும் பல அசிங்கமான வேலைகளை எல்லாம் செய்து வருகிறார்கள். இன்னும் சமூக வலைத்தளங்களில் இவர்கள் என்னென்ன அட்டூழியங்களை???? பண்ணப் போகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு செய்து வருகிறார்கள். மேலும், சமூக வலைத்தளங்கள் என்பது பிரச்சினைகளை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உபயோகப்படுத்துவது.

இதையும் பாருங்க : இவங்கெல்லாம் ஜெயலலிதாவானு கேட்டாங்க. ஆனால், பர்ஸ்ட் போஸ்டரை பாருங்க.

- Advertisement -

ஆனால்,இப்போது சமூக வலைத்தளமே பிரச்சனையாக மாறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் குறுக்கு புத்தி போய்க்கொண்டிருக்கின்றது. மேலும், விஜய்– அஜித் ரசிகர்கள் செய்யும் அத்தனை அழிச்சாட்டியம் அளவே இல்லை. இவர்களுடைய செயலினால் எல்லை மீறிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. மேலும், இவர்கள் எல்லாம் ரசிகர்களா??? என்று திட்டும் அளவிற்கு இவர்களுடைய செயல் இருந்து வருகிறது. அதிலும் தற்போது இவர்களுடைய செயல் வக்கிரத்தின் உச்ச கட்டத்திற்கு போய்விட்டது என்றும் சொல்லலாம். அதுவும் சமூக வலைத்தளங்களில் கேவலமான ஹாஸ்டேக்குகளை உருவாக்கி டிரன்டிங் செய்தும் வருகிறார்கள். உண்மையாகப் பார்த்தால் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ கிடையாது.

ஆனால், அவர்கள் பெயரை சொல்லி ரசிகர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய் விடுகிறது. மேலும், ரசிகர்கள் என்ற போர்வையில் இவர்கள் பல அசிங்கத்தை செய்து வருகிறார்கள். அப்படி இவர்கள் இப்போது செய்த காரியம் சகித்துக் கொள்ளவே முடியவில்லை அந்த அளவுக்கு உள்ளது. விஜய்–அஜித் ரசிகர்கள் ” #RemovebrainofActorVIJAYFANS #RemovebrainofActorAJITHFANS என்ற ஹாஸ்டேக்குகளை உருவாக்கி மாறி மாறி அசிங்கம் படுத்தி வருகிறார்கள். இதுல என்ன ஒரு அதிர்ச்சியான விஷயம் என்று பார்த்தால் இந்த ரெண்டு ஹாஸ்டேக்குகளும் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துட்டு பதிலுக்கு ட்விட் செய்து வருகிறார்கள். இது தான் பயங்கர கஷ்டமாக இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அதில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் சொல்லவே முடியல அந்த அளவுக்கு உள்ளது. அது மட்டுமில்லாமல் இப்ப இருக்கும் பிரண்டிங் நியூஸியில் இந்த இரண்டு ஹாஸ்டேக்குகளும் தான் வேற லெவல்ல போயிட்டு இருக்கு. மேலும், அஜித்-விஜய் ரசிகர்களின் இந்த அரக்கத்தனமான செயல்களுக்கு தல, தளபதி தான் தலைகுனியும் நிலை வரப்போகிறது. இதை நடிகை டாப்சி அவர்கள் “என்ன நடக்கிறது இங்கே” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி கொள்கிறார்கள். நீங்க திருந்த மாட்டீர்கள் என்று தோன்றுகிறது என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement