கௌண்டமணி அம்மாவை நேரில் சென்று சந்தித்த விஜய். இதுவரை வெளிவராத அறிய புகைப்படம்.

0
35479
Goundamani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய் அவர்கள். மேலும், விஜய் அவர்கள் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு போது நடிகர் கவுண்டமணியின் அம்மாவை நேரில் சந்தித்து பேசி உள்ளாராம். மேலும், அதற்கான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து விளங்கியவர் நடிகர் கவுண்டமணி. மேலும், நகைச்சுவை நடிகர் என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது நடிகர் கவுண்டமணி தான். ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி. மேலும், இவருடைய கால்ஷீட் இருந்தால் தான் அந்த படம் ஹிட்டாகும் என்ற நிலை இருந்தது. மேலும், கவுண்டமணி– செந்தில் காமெடி என்றால் தற்போது உள்ள மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன் கருப்பையன். சினிமாவிற்காக கவுண்டமணி என்று மாற்றிக் கொண்டார்.

-விளம்பரம்-
Velayutham Movie On Location Gallery

இவருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான் கவுண்டமணி என்ற பெயரை வைத்தார். மேலும், இவர் 1964 ஆம் ஆண்டு தான் திரை உலகில் அறிமுகம் ஆனார். இவர் சினிமா உலகில் துவக்க காலங்களில் தனியாகத் தான் நகைச்சுவை நடிகராக நடித்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இவர் படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பல வேடங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் நடித்த ‘கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், தங்கம், இந்தியன், நாட்டாமை, முறைமாமன்’ என பல சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த எல்லா படங்களும் வேற லெவல் என்றும் சொல்லலாம்.

- Advertisement -

மேலும், நடிகர் கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை திறனுக்காக பல விருதுகளை வாங்கி உள்ளார். மேலும், சில வருடங்களாகவே இவர் சினிமா படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2011ஆம் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ‘வேலாயுதம்’. இந்த படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, மோத்வானி, சரண்யா மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் ஒரு சாகச, நகைச்சுவை திரைப் படமாக அமைந்தது. மேலும், இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது என்றும் சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் எடுக்கப்பட்டது.

மேலும், நடிகர் கவுண்டமணி அவர்களின் வீடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் தான் உள்ளது. தற்போது அவருடைய தாய் மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகிறார். மேலும், வேலாயுதம் பட சூட்டிங்க்கு பொள்ளாச்சிக்கு போயிருக்கும் போது கவுண்டமணியின் தாயாரை இயக்குனர் மோகன் ராஜாவும்,விஜயும் நேரில் சந்தித்து பேசி உள்ளார்கள். மேலும், அவருடைய வீட்டிலேயே படத்தின் ஒரு சில காட்சிகளை எடுத்ததாகவும் தெரியவந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement