தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பாடகிகளில் சுசித்ராவும் ஒருவர். இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு வானொலி ஒலிபரப்பாளர் ஆனார். பின்பு இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகி மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாடகி சுசித்ரா அவர்கள் வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உங்களிடம் பிரபலங்கள் யாராவது உங்களுடைய பாடலில் இது எனக்கு பிடிக்கும் என்று கேட்டுள்ளார்களா? என்று கேட்டதற்கு சுசித்ரா அவர்கள் கூறியது, ஒரே ஒருவரைத் தவிர அந்த மாதிரி யாரும் கேட்கவில்லை.
வீடியோவில் 7 நிமிடத்தில் பார்க்கவும்
தல அஜித் மட்டும் தான் என்னிடம் கேட்டார். ஒருமுறை நாங்கள் பார்டிக் சென்று இருந்தோம். அப்போது தல அஜித் என்னை பார்த்து உங்களுடைய பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நீங்கள் பாடிய சின்ன தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல பாட்டாகவே அமைகிறது என்று கூறினார். எனக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. பின் அவர் அந்த பாடலை இரண்டு வரிகள் பாடச் சொன்னார். நானும் பாடினேன் என்று கூறினார்.
2009ஆம் ஆண்டு விஜய், அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த படம் வேட்டைக்காரன். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் தான் ஒரு சின்ன தாமரை. இந்தப் பாடல் பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பாடகி சுசித்ரா தளபதிக்கு மட்டுமில்லாமல் தலக்கும் மங்காத்தா படத்தில் வாடா பின்லேடா என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தல, தளபதி இரண்டு பேருமே தமிழ் சினிமா உலகின் இரு தூண்கள். இவர்கள் இருவருக்குமே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் தான் நடித்து இருந்தார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது வரை இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் திகழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் விஜய் அவர்கள் நான் என் நண்பனை போல உடை அணிந்து வந்துள்ளேன் என்று கூறியிருந்தார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்காகவும், தல அஜித்தின் வலிமை படத்திற்காகவும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.