கம்பியில் தொங்கியபடி உடற்பயிற்சி. கீழே விழுந்த அருண் விஜய் – ஷாக்கிங் வீடியோ இதோ.

0
2931
arunvijay
- Advertisement -

திரையுலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து திரையுலகில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் அருண் விஜய்-க்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-
Arun Vijay

அருண் விஜய். 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து “பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி,துள்ளித் திரிந்த காலம், கண்ணால் பேசவா, அன்புடன், முத்தம், இயற்கை, ஜனனம், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தவம், வேதா, மலை மலை, துணிச்சல், மாஞ்சா வேலு, தடையறத் தாக்க” போன்ற பல படங்களில் அருண் விஜய் ஹீரோவாக நடித்தார்.

- Advertisement -

இதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அருண் விஜய் ஒரு பிரபல நடிகராக மாற வேண்டிய லக் அதன் பிறகு அடித்தது. ஆம்.. அந்த படம் தான் ‘என்னை அறிந்தால்’. இதில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அருண் விஜய்-க்கு பவர்ஃபுல்லான வில்லன் ரோல். அதை கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு செய்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.இந்த படத்தில் தான் அருண் விஜய் சிக்ஸ் பேக் உடலை கொண்டு வந்தார். இந்த படத்தை தொடர்ந்து தனது சிக்ஸ் பேக் உடலை அப்படியே மைண்டைன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய், தனது வொர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் ‘எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். எப்போதுமே உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் ஜிம் கருவியை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்” என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் அருண்விஜய்.

-விளம்பரம்-
Advertisement