சென்னை மக்களின் நண்பன் பல்லவன் – கல்லூரி படிக்கும் போது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கார்த்தி.

0
2574
karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவின் சகோதரர், நடிகர் சிவகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தி அவர்கள் 2007-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளி வந்த ‘பருத்தி வீரன்’ படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமாயி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அவர்கள் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி, மெட்ராஸ், தோழா, காஷ்மோரா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி, என பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் கார்த்தி சென்னையில் உள்ள கிரேசன்ட் கல்லூரியில் தான் பொறியியல் படித்தார். அதன் பின்னர் தான் வெளிநாட்டில் படிக்கச் சென்றார். இப்படி ஒரு நிலையில் சென்னையில் படித்த போது தனது நண்பர்களுடன் பல்லவன் பேருந்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் கார்த்தி. அதில் ‘பல்லவன், சென்னை மக்களின் நம்பிக்கையான நண்பன். என்னுடைய கல்லூரி நாட்கள் அதிகம் செலவிட்டது பேருந்தில் தான்’ என்று தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இதையும் பாருங்க : அசுரன் பட மரியாம்மா, தெலுங்குக்கு சென்றதும் வேற மாரியம்மா – இப்படி கிளாமருக்கு தாராளம் காட்டி இருக்காரே. FCUK பட வீடியோ இதோ.

- Advertisement -

நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அளித்திருந்தார். அதில் அவர் நடிகர் கார்த்தி சினிமாவிற்கு போவேன் என்று அடம் பிடித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது, சின்ன வயதில் இருந்தே கார்த்திக்கு சினிமாவில் தான் அதிக ஆர்வம். ஒரு முறை அவன் லீவுக்காக சென்னைக்கு வந்து இருந்தான். அப்போது விக்ரமோட காசி படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை பார்த்து விட்டு அவனுடைய மைன்ட் செட்டு ஃபுல்லா சினிமா துறை என்று முடிவு செய்துவிட்டான். வெளிநாட்டுக்கு படிக்க போக மாட்டேன்னு சொன்னான். நான் என்ன பாவம் பண்ணுனேன். போய் படி படின்னு சொல்றீங்களே. நான் எதை நோக்கி போக நினைக்கிறேன். ஆனால், இப்படி நீங்க பண்றீங்களேன்னு சொன்னான்.

உடனே நான் உங்க அண்ணனுக்கு நடிக்கணும்னு ஆசை இல்லை. ஆனால், அவனுக்கு வாய்ப்பு தானா தேடி வந்தது. உனக்கு ஆசை இருக்கு. ஆனால், உனக்கு வாய்ப்பு வரல. இயக்குனர் பாலா, சங்கர் யாராவது வந்து ஆறு மாசத்துக்குள்ள உன்னை ஹீரோவாகுக்கிறேன் என்று சொல்ல சொல்லு நான் இப்போவே பாஸ்போர்ட்டை கிழித்துப் போட்டுறேன் என்று சொன்னேன். உடனே அவன் படிக்க வெளிநாட்டிற்கு சென்று விட்டான். வெளிநாட்டுக்கு போய் படிப்பை முடித்துவிட்டான்.மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம். ஆனால், அவன் இந்தியா தான் என்னுடைய நாடு, சினிமா தான் என்னுடைய உலகம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement