அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதேபோல அஜித்திற்காக அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
அஜித் தற்போது ‘தீரன்’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்போதே அஜித்தின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை சமூகவலைதளத்தில் ஆரம்பித்துவிட்டார்கள்.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காமன் டிபி ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், அஜித் பிறந்தநாளன்று ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஏதவாது அப்டேட் வருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவேனில், அஜித்தின் தந்தை சுப்ரமய்யத்திற்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் உள்ளதாம். இதனால் அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.