படப்பிடிப்பிலும் மற்ற கடமைகளை கைவிடாத தல.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0
631
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகர்களில் அஜித் சற்று வித்தியாசமானவர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் விஸ்வாசம் படத்திற்கு பின்னர் மேலும் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும். இந்த படம் தற்போது நூறாவது நாளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

நடிப்பையும் தாண்டி நடிகர் அஜித் கார், பைக், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விடயங்களில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதேபோல அஜித்திற்கு ஆளில்லா விமானம் இயக்குவதிலும் அதிக ஆர்வம் உண்டு. அதனால் தான் இவரை தக்ஷா ஆளில்லா விமான குழுவின் தலைவராகவும் நிர்ணயித்தது அண்ணா பல்கலைக்கழகம்.

- Advertisement -

இந்தக் குழுவை நடிகர் அஜித் தான் வழி நடித்து வந்தார். இந்த குழு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் இரண்டாம் பரிசையும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது. இதற்காக அஜித்திற்கு பல பாராட்டுக்களும் குவிந்தது.இந்த குழுவின் ஆலோசகராக அஜித்தின் பங்கு மிக முக்கியமானது.

வெறும் ஆலோசகராக மட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது கூட தக்ஷா குழுவினரை படப்பிடிப்பு தளத்திற்கே வரவேற்று அங்கேயும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார் அஜித். அதன் சான்றாக விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் ஆளில்லா விமானத்தை இயக்கிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Advertisement