ஜாவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்த விஷயங்களை நீக்கியதா சன் பிக்சர்ஸ் ? விவரம் இதோ.

0
835
Atlee
- Advertisement -

விஜய் மீது சன் டிவிக்கு ஏன் இந்த கோபம்? என்ற சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் மெர்சல், பிகில் போன்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

- Advertisement -

ஷாருக்கான்-அட்லீ படம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட்சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

இசை வெளியிட்டு விழா:

இந்த படம் இந்த மாதம் வெளியாகயிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் ஷாருக்கான், அட்லி உட்பட படகு குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் இந்த விழாவில் நடிகை நயன்தாரா மற்றும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை ஜவான் படக் குழுவினர் பகிர்ந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் மீது சன் டிவிக்கு கோபம்:

மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவை சில தினங்களுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பு இருந்தார்கள். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் அட்லீ விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதை சன் டிவியில் ஒளிபரப்பவில்லை. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. அதில் சிலர், விஜய் மீது சன் டிவிக்கு நிறைய கோபம். அதனால் தான் அதை இப்படி காட்டி விட்டார்கள் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

உண்மை நிலவரம்:

இந்த நிலையில் இது தொடர்பான உண்மைதான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை எடிட் செய்தது சன் டிவி கிடையாது. 2 மணி நேரம் ஜவான் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்ப மட்டும்தான் சன் டிவி அனுமதி கொடுத்திருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவை எடிட் செய்தது கோகுலம் சினிமாஸ். இதனால் சன் டிவிக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்கள்,

Advertisement