நான் கஷ்டத்தில் இருந்த போது அவர் தான் உதவி செய்தார்..!அஜித் பற்றி சென்ராயன் நெகிழ்ச்சி..!

0
487
Senrayan

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதைவிட ஒரு சிறந்த மனிதர் என்பதை பல்வேறு தருணங்களில் நிரூபித்துள்ளார். அஜித்தின் நற்குணம் பற்றி பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்த நிலையில் தற்போது நடிகர் சென்ராயனும் அஜித்தின் குணம் குறித்து தெரிவித்துள்ளார்.

unnaikuduennaitharuvean

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

நடிகர் சென்ராயன் ஆரம்ப காலகட்டத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த போது அஜித் நடித்த ‘உன்னை கொடு என்னை தருவேன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் தனக்கு செய்த உதவி உறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகர் சென்ராயன்.

Senrayan

அந்த பேட்டியில் பேசிய அவர்,அஜித் சாரின் உன்னை கொடு என்னை தருவேன் படத்தின் படப்பிடிப்பு ஒரு முறை ஊட்டியில் நடைபெற்றது. அங்கே குளிர் தாங்க முடியாமல் அனைவரும் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு இருந்தனர் ஆனால், நான் மட்டும் சாதாரண உடையில் பல் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தேன். எங்கே என்னை யாரும் கேட்காத போது நான் குளிரில் நடுங்கி கொண்டிருந்த்ததை பார்த்த அஜித் சார் என்னிடம் வந்து ‘ஏன் உங்க கிட்ட ஸ்வேட்டர் இல்லையா என்று கேட்டார்.

நான் இல்லை என்றதும் உதவியாளரை அழைத்து இவருக்கு ஸ்வேட்டெர் வாங்கிட்டு வாங்க என்று சொன்னார் அஜித் சார்.பின்னர் ஒரு மணி நேரத்தில் எனக்கு ஸ்வெட்டெர் வந்தது அப்போது தான் குளிரில் நடுங்கி கொண்டிருந்த எனக்கு உயிரே வந்தது போல தெரிந்தது என்று கூறியுள்ளார் சென்ராயன்.