தல59 படத்தில் பாட போகிறார் அஜித்..!ஏ ஆர் ரகுமான் திட்டவட்டம்..!

0
454
Arrahmanajith

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் அஜித்.

Ajithvinoth

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வந்தது. ஆனால்,சமீபத்தில் அதனை மறுத்து ட்வீட் செய்திருந்தார் வினோத்.

இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை புயல் ஏ ஆர் ரகுமான் ஐயமிக்க உள்ளார். ஏ ஆர் ரகுமான் ஏற்கனவே அஜீத்துக்கு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’,‘வரலாறு’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பதற்போது மூன்றாவது முறையாய் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

சமீபத்தில் இந்த படத்தின் தீவீர டிஸ்கஷனில் ஏ ஆர் ரகுமானும் வினோத்தும் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடாமல் தல என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது என்று இயக்குனர் வினோத்திடம் திட்டவட்டமாக சவால் விட்டிருக்கிறாராம் ரகுமான். இதனால் அஜித்தின் குரலில் விரைவில் பாடலை கேட்பதற்க்களான வாய்ப்பு இருக்கிறது.