வீட்டில் கர்ட்டைனில் கூட டெக்னாலஜி இருக்கு. தல அஜித்திடம் லேட்டஸ்ட் எல்லாம் இருக்கும் – ஆதித்யா மேனன்.

0
31620
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். நடிப்பையும் தாண்டி அஜித்திற்கு கார் பைக் விமானம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவ்வளவு ஏன் சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கூட கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார் அஜித். ஆனால், அஜித்தின் வீட்டில் கூட பல்வேறு டெக்னாலஜியை பயன்படுத்தி வருகிறார் என்று அஜீத்துடன் பில்லா படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் ஆதித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for adithya menon

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபரவர் ஆதித்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜே.ஜே. என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் பில்லா படத்தில் அஜித்தை வேட்டையாட கிளம்பும் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : நயனின் முன்னாள் காதலர் சிம்பு செய்த அதே விஷயத்தை செய்துள்ள விக்கி. என்னனு பாருங்க.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆதித்யா மேனன் அஜித் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், , அஜித் ஒரு தொழில்நுட்ப பிரியர். அவருடன் இருக்கும் போது டெக்னாலாஜி குறித்து நிறைய அறிய முடிந்தது. மேலும் லேட்டஸ்ட் கேஜெட்டுகள் அனைத்துமே அவர் வசம் இருக்கும்.சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் தான் அஜித்தின் வீட்டை புதுப்பித்து கொடுத்தார். வசிக்கும் வீடு முழுவதுமே ஆட்டோமைஸ்டு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் எனது நண்பர் தெரிவித்தார். அஜித் வீட்டில் உள்ள ஸ்க்ரீன்கள் பேசினால் திறக்கும். இது மாதிரி பல தொழிநுட்பங்களை, தன் வீடு முழுவதும் நிரப்பியுள்ளார் அஜித்.

-விளம்பரம்-

வீடியோவில் 6:34 நிமிடத்தில் பார்க்கவும்

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். இவர் கடைசியாக தமிழில் மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்ற படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரம், துணை நடிகர், காமெடி நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் இதுவரை தென்னிந்திய மொழிகளில் நூறு படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். தற்போது இவர் முதன் முதலாக டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுனில் ஷெட்டிக்கு நடிகர் ஆதித்யா மேனன் அவர்கள் தான் டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement