Don படத்தின் நடுவிலேயே வெளிவந்த சிவகார்த்திகேயன் – என்ன காரணம் தெரியுமா ? வீடியோ இதோ.

0
459
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு இது தான் இவரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

- Advertisement -

டான் படத்தின் கதை:

ஆனால், மகனாக சிவகார்த்திகேயன் பிறக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் மீது சமுத்திரக்கனி அதிக ஈடுபாடு காட்டாமல் கண்டிப்புடன் வளர்க்கிறார். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் சாதிக்க மாட்டார் என்று சமுத்திரக்கனி நினைக்கிறார். தன் தந்தையின் எண்ணத்தை முறியடிக்க சிவகார்த்திகேயன் சாதித்துக் காட்ட முயற்சிக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

ரசிகர்களுடன் படம் பார்த்த சிவா:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே சிவகார்த்திகேயன் வெளியே வந்தது குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு கமெண்ட்ஸ் எழுந்து வருகிறது. இன்று அதிகாலை 4 மணி முதல் டான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காலை முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், காலை 4 மணி காட்சியை காண நடிகர் சிவகார்த்திகேயன் ரோகிணி திரையரங்கிற்கு சென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

சிவா திரையரங்கில் இருந்து வெளியேறிய காரணம்:

பின் சிவா படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார். படக்குழுவினரும் ரசிகருடன் படத்தினை கண்டு மகிழ்ந்து இருக்கின்றார். இந்த நிலையில் முதல் காட்சியை சிவகார்த்திகேயன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாதியிலேயே எழுந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் சிவகார்த்திகேயனை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். மேலும், இந்த வீடியோவை கண்ட சிலர் அவருக்கே படம்பிடிக்க போல என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கின்றனர். ஆனால்,பாதியிலேயே எழுந்து வந்தது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இடம் கேட்டபொழுது இன்னொரு திரையரங்கிற்கு படம் பார்க்க போகிறேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 டாக்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

மேலும், சிவகார்த்திகேயன் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்

Advertisement