ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு – என்ன காரணம் தெரியுமா ?

0
615
- Advertisement -

ஆசை ஆசையாக கட்டிய அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. மேலும், விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் படம் ரசிகர்கள் கூறுகின்றனர்.

படம் குறித்த தகவல்:

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. ஆனால், கடந்த வாரம் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அஜித்தின் வீடு இடிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நடிகர் அஜித் அவர்கள் சென்னையில் திருவான்மியூரில் வசித்து வந்திருந்தார்.

-விளம்பரம்-

அஜித் வீடு சுற்றுச்சுவர் இடிப்பு:

தற்போது ஈச்சம்பாக்கத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் இடையூறாக இருக்கும் பல வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நடிகர் அஜித்தின் வீட்டு சுவர் இடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அஜித் வீட்டில் இருப்பவர்கள் நேராக வீட்டில் இருந்து கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அஜித் தன்னுடைய பங்களாவில் சில நவீன மாற்றங்கள் எல்லாம் கொண்டு வர விரும்பி இருந்தார்.

அஜித் வீடு குறித்த தகவல்:

இதனால் தான் குடும்பத்துடன் அந்த வீட்டில் இருந்து வேறு வீடு வாடகை வீட்டுக்கு சென்று வசித்து இருந்தார். வீட்டில் இருக்கும் அனைத்தையும் வெளிநாட்டு தரத்தில் ரிமோட் மூலம் இயக்குவது போல் ஹோம் டிசைன் வைத்து வடிவமைத்தார். மகன் மற்றும் மகனின் தேவைக்கு ஏற்ப விளையாட தனி ரூம், நடனம் கற்றுக்கொள்ள தனி இடம் என்று அனைத்து அறைகளையும் பார்த்து பார்த்து கட்டி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய வீட்டின் சுற்றுச்சுவர் பகுதி இடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement