நான் அப்படி இருப்பதாலேயே எனக்கு ஒரு சில பட வாய்ப்பு பறிபோனது – கலர் கூட இல்ல, அபிராமி சொன்ன அந்த காரணம்.

0
490
Abhirami
- Advertisement -

இந்த காரணத்தினால் தான் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகை அபிராமி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தார் அபிராமி. இவர் 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இவருடைய இயற்பெயர் திவ்யா. இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்தது. மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

- Advertisement -

அபிராமி திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் அபிராமி மிகப் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார் என்றும் சொல்லலாம். அதற்கு பின்னர் சரியாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின் இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

மேலும்,இவர் திருமணத்திற்குப் பின்னும் சில படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே படம் . ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளம் படங்களில் மட்டும் தான் நடித்து வருகின்றார். பட வாய்ப்புகள் குறைந்ததால் இடையில் சீரியல் பக்கம் சென்றார் அபிராமி. இருந்தாலும், கடந்த சில வருடங்களாக சீரியலில் நடிப்பதையும் நிறுத்தினார். பின் சிறிய இடைவெளிக்கு பின் தமிழில் அபிராமி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

உயரத்தால் ஏற்பட்ட பிரச்சனை :

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆர் யூ ஓகே பேபி. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, வினோதினி வைத்தியநாதன், கலையரசி, அனுபமா அபிராமி, விஜே ஆஷிக், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது குறித்து சொன்னது, என்னுடன் நடித்த பல நடிகர்கள் என்னைவிட உயரமானவர்கள்.

பறிபோன வாய்ப்புகள் :

பிறமொழிக்கு சென்றபோது உயரம் அதிகம் இருப்பவர்கள், உயரம் இல்லாதவர்கள் என்று எல்லோருடனும் நடித்தேன். உயரம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால், சிலர் அந்த பொண்ணு ரொம்ப உயரமாக இருக்கிறார் என்று என்னை ஒதுக்கி இருக்கிறார்கள். இது பிரச்சினையாக நான் நினைக்கவில்லை. இதனால் பல பட வாய்ப்புகள் போனது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement