தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜீத். தல அஜித் அவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். கடந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. அதோடு இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து உருவாகி வருகிற படம் தான் “வலிமை”.
இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் போய் கொண்டு உள்ளது. அதே போல் தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி. பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.நடிகை ஷாலினி அவர்கள் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித் அவர்களின் 25 வது படமான “அமர்க்களம்” படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.
இதையும் பாருங்க : பின்னாடி பாக்காதீங்க. மீண்டும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய ஷாலு ஷம்மு.
இதனைத் தொடர்ந்து அஜித்தும்,ஷாலினியும் இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுடைய கல்யாணம் நடைபெற்றது. தமிழ் சினிமா உலகில் நிஜ வாழ்க்கையில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சீனியர் என்றே சொல்லலாம். இவர்களுக்கு 2008இல் அனுஷ்கா என்ற அழகான பெண் குழந்தையும், 2015ம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.
வீடியோவில் 14 நிமிடத்திற்க்கு பின் பார்க்கவும்
எப்போதுமே தமிழ்நாட்டு மக்களுக்கு தல ஸ்பெஷல் தான். தல அஜித்தை பொது இடங்களில் காண்பது அரிது. அதுமட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய குடும்பத்தையும் வெளியுலகத்திற்கு அவ்வளவாக காட்ட மாட்டார். இவருடைய குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் மட்டும் தான் அதிகமாக காண முடியும். ஏனென்றால் அஜித் அவர்கள் தன்னால் பொது மக்களுக்கும், ரசிகர்களுக்கும் எந்த ஒரு இடையூறு வரக்கூடாது என்பதற்காகத் தான் இவர் வெளியில் வருவதை குறைத்துக் கொண்டு உள்ளார். அவரது குடும்பத்தையும் அவ்வளவு எளிதாக வெளியில் காண்பது அரிதாக உள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் அஜீத் மற்றும் அவரது மகள் பற்றி கூறியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் அவர்கள் தல அஜித்தை வைத்து வில்லன் மற்றும் வரலாறு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் அஜித் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
தற்போது கே எஸ் ரவிக்குமார் அவர்கள் பேட்டியில் கூறியது, நான் என்னுடைய இரண்டாவது மகள் திருமணம் பத்திரிகை கொடுக்க அஜித் வீட்டிற்கு சென்று இருந்தேன். அப்போது அவரது மகள் அனுஷ்காவிடம் அஜித் அவர்கள் இந்த அங்களின் மகள் அரங்கேற்றத்துக்கு தான் நான் உன்னை முதன் முதலாக வெளியே கூட்டிட்டு சென்றேன் என்று கூறினார். பின் நாங்கள் இருவரும் இரண்டு மணி நேரம் பேசினோம் என இயக்குனர் கூறியிருந்தார். இவர்கள் இருவர் கூட்டணியில் வரும் படத்தை ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் மீண்டும் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.