திருமணமான ஓராண்டில் கணவருடன் விவாகரத்து. விபச்சார வழக்கில் சிக்கிய தமிழ் நடிகை.

0
27604
swetha-bashu

சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்குஅறிமுகமானார். இவர் அதிகம் இந்தித் திரைப் படங்களிலும், ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் தான் நடித்து உள்ளார். இவர் பெங்காலி, தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உதயா, கருணா நடித்த சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் உள்ளிட்ட சில படங்களில் தான் நடித்து உள்ளார். பின் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். ஹிந்தியில் இவர் நடித்த Makdee என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்காக இவர் தேசிய விருது கூட வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்து.

Image result for swetha basu prasad divorce

- Advertisement -

இதனால் இவர் 2014ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் போலீசார் நடிகை ஸ்வேதா பாசுவை கைது செய்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. பின் ஸ்வேதா பாசு வெளி வந்தவுடன் எனக்கு பணத் தேவை இருந்ததால் தான் வேறு வழியின்றி விபச்சாரத்திற்கு ஒப்புக் கொண்டதாக இவர் வெளிப்படையாகவே கூறி இருந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலிவுட் பட இயக்குனரும், நெருங்கிய நண்பருமான ரோஹித் மிட்டல் என்பவரை நடிகை ஸ்வேதா பாசு காதலித்து வந்தார். பின் இவர்கள் காதல் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தார்கள். இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் மும்பயில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : இந்த பங்ஷனுக்கு தான் உன்னை முதலில் வெளி உலகத்துக்கு அழைத்து செல்வேன் என்று அவர் மகள் கிட்ட சொன்னார் – இயக்குனர் சொன்ன ரகசியம்.

பின் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி புனேவில் கோலாகலமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் கூட முழுமையாக ஆகவில்லை. தற்போது தனது கணவரை விவாகரத்து செய்வதாக உள்ளேன் என்று நடிகை ஸ்வேதா பாசு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் எப்போதும் கல்யாணம் செய்து கொண்டு ஒரு வருடம் கூட முழுமையாக சேர்ந்து வாழ மாட்டார்கள். உடனுக்குடனே கோர்ட், விவாகரத்து தான்.

-விளம்பரம்-

ஒரு சில சினிமா பிரபலங்கள் தான் திருமண வாழ்க்கையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறார்கள். அதுவும் தற்போது இருக்கும் தலை முறையினர் எல்லோருமே சின்ன விசயத்திற்கு கூட டிவோர்ஸ் செய்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு நம் கலாச்சாரமும், பாரம்பரியமும் மாறி விட்டது. அதில் இவர்கள் மட்டும் என்ன விதி விலக்கா? இவர்கள் விவாகரத்து பற்றி நடிகை சுவேதா பாசு பிரசாத் கூறியது, பல மாதங்கள் யோசனைக்கு பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்து உள்ளோம். அதோடு நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம். எல்லா புத்தகங்களையும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படிக்க முடியாது. அதற்காக அந்த புத்தகம் மோசம் இல்லை என்று சொல்ல முடியாது. அதே மாதிரி தான் வாழ்க்கை. என் வாழ்க்கையில் சில நல்ல நினைவுகளையும் அவர் எனக்கு ஏற்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் உள்ளார். அதற்காக நான் ரோஹித்துக்கு நன்றி சொல்கிறேன். இனிமையான வாழ்க்கை உனக்கு இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார் என்று கூறினார்.

Advertisement