சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் விவேகம் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. ஆனால், அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான படமாக அமைந்தது. இந்த படத்தில் காமெடியனாக கருணாகரன் நடித்திருப்பார்
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ராஜினிகாந்தின் பாட்ஷா ரீமேக் படத்தில் அஜித் தான் நடிக்க வேண்டும் என நடிகர் கருணாகரன் கூறியள்ளார். அவர் கூறியதாவது ,
பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால், கண்டிப்பாக அதில் தல அஜித் தான் நடிக்க வேண்டும். அவர்தான் அதற்கு பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் கேங்ஸ்டர் படங்களில் நடிக்க அஜித் தான் சரியான ஹீரோ எனக் கூறியுள்ளார் கருணாகரன்.




