தனது மகனை மடியில் அமர்த்தி வைத்து கொஞ்சும் தனுஷ். வைரலாகும் க்யூட் புகைப்படம்.

0
70449
dhanush
- Advertisement -

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் 2011 ஆம் ஆண்டு ‘3’ படத்தில் இவர் பாடிய “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் வேற லெவல்ல உலக முழுவதும் உள்ள ரசிகர்களை தெறிக்காவிட்டது என்று கூட சொல்லலாம். தனுஷ் அவர்கள் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன், இயக்குனர் செல்வராகவனின் சகோதரரும் ஆவார். அதோடு தமிழ் சினிமா உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கி கொண்டு இருக்கும் ரஜினிகாந்த்தின் மருமாகனும் ஆவார். மேலும், நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளையமகன் லிங்கா ஆவார்.

இதையும் பாருங்க : பீச்சில் நடந்த ரிசப்ஷன். காதல் கணவருக்கு ஆங்கில முத்தம் கொடுத்த திவ்யா. வைரலாகும் புகைப்படம்.

தற்போது நியூஸ் என்னவென்றால் நடிகர் தனுஷ் அவர்கள் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், இந்த புகைப்படத்தில் தனுசும், அவருடைய மகனும் அழகாக வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் உள்ளார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனுசின் மகன் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டாரா! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டாரே என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

Actor #Dhanush WIth His Sons Yatra And Linga

A post shared by Behind Talkies (@behindtalkies) on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் நீண்டகால காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “பட்டாஸ்”. இந்த படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 40வது படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அதோடு இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் உள்ளது.

Advertisement