தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக திகழ்ந்துவரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமாகி இருக்கும் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அஜித் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆனால், இவருடைய தந்தை தமிழ், தாய் சிந்தி. இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆவார். அதில் அஜித் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
அஜித்துக்கு சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் அணில் குமார். இவர் jodi 365.com எனும் மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அஜித் குடும்பத்தினர் யாரும் பெரிதாக மீடியா வெளிச்சத்திற்கு வந்தது கிடையாது. கராச்சி பார்ட்டிஷன் போது அஜித்தின் அம்மா அங்கிருந்து வந்துவிட்டார்கள். பின் அஜித் தந்தை வேலை ட்ரான்ஸ்பர் போது ஹைதராபாத்திற்கே வந்துவிட்டனர்.
அதற்கு பின்னர் இவர்கள் சென்னைக்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. அஜித்தின் தந்தை சுப்ரமணி ஒரு பிராமின் அதனால் இவர் அசைவம் சாப்பிட மாட்டார் ஆனாலும் தங்கள் பிள்ளைகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னது கிடையாது. அவர்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட அவர் அனுமதித்து இருக்கிறார் எதனை அஜித்தின் சகோதரர் அனில்குமார் பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்ரமணி இன்று அதிகாலை காலமாகி இருக்கும் சம்பவம் அஜித் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாக இருந்தது. மேலும், அவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த சுப்பிரமணியம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84. இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது