லடாக்கில் மாஸாக தன் நாயகியுடன் பைக் ரைடு செய்த அஜித் – யாருன்னு நீங்களே பாருங்க

0
478
ajith
- Advertisement -

நடிகர் அஜித்துடன் கரடு முரடான பாதையில் பைக் ரைட் ஓட்டிய பிரபல நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது.

- Advertisement -

அஜித்தின் பைக் ரைடு:

சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் உடைய எதாவது ஒரு அன்சீன் புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல நடிகை உடன் அஜித் பைக் ரைடு செய்திருக்கும் வீடியோ, புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையுடன் அஜித் பைக் ரைட்:

அதாவது, தற்போது அஜித் அவர்கள் லடாக் சென்றிருக்கிறார். அங்கு அவர் கரடு முரடான பாதையில் மாஸாக பைக் ஓட்டியிருக்கிறார். இவருடன் ஏகே 61 பட கதாநாயகி மஞ்சு வாரியரும் பைக் ரைடு செய்திருக்கிறார். தற்போது அஜித் பைக் ரைடு செய்த புகைப்படமும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் செம வைரலாக்கி லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஏகே 61 படம்:

இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி, விசாகப்பட்டினம், சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிறது. மேலும், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏகே 62 படம்:

அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement