பம்பா பாக்யா இறப்பிற்கு சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவிக்காமல் நேரில் சென்று AR Rahman – வைரல் வீடியோ.

0
203
arrahman
- Advertisement -

ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பாடிய பாடகர் பம்பா பாகியா காலமாகி இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சர்க்கார். இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் உடன் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், ராதா ரவி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

பம்பா பாக்யா குறித்த தகவல்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இந்த படத்தில் இடம் பெட்ரா சிம்டாங்காரன் என்ற பாடலை பாடியவர் பம்பா பாக்யா. இவர் மெட்ராஸ் கிக் தனிப்பாடல்களில் ‘எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வைக்குறியே’ என்ற பாடல் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியிருந்தார்.

பம்பா பாக்யா இசை பயணம்:

அதன் பின்னர் இவர் ரகுமான், ஹிப் ஹாப் ஆதி போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்கள் இசையில் இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திலும் பாடலை பாடியிருந்தார். அதற்குப் பிறகு பிகில், சர்வம், தாள மையம், சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியாகியிருந்த இரவின் நிழல் படத்திலும் இவர் பாடியிருக்கிறார். இப்படி தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடகராக பம்பா பாக்யா திகழ்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பம்பா பாக்யா உடல்நிலை குறைவு:

மேலும், மணிரத்தினம் நீண்ட நாள் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் முதல் பாகத்தில் இவர் பாடியிருக்கிறார். இந்த நிலையில் பம்பா பாக்யா இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இவருக்கு 42 வயது தான் ஆகிறது. நேற்று மதியம் பம்பா பாக்யாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதற்குப்பின் இவரை அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தார்கள்.

நேரில் சென்று இரங்கல் தெரிவித்த ரஹ்மான் :

அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் இதயத்துடிப்பு குறைந்து சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்து இருக்கிறது. அதற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா மரணம் அடைந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரது இறப்பிற்கு ஏ ஆர் ரஹ்மான் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. ஆனால், ஏ ஆர் ரஹ்மான் நேரில் சென்று பம்பா பாக்யா உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement