தமிழ் சினிமாவில் தல என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அஜித்திற்கு இந்த ஆண்டு ஒரு வெற்றிகரமாக ஆண்டாக அமைந்து இருந்தது. அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதிலும் விஸ்வாசம் திரைப்படம் 300 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இறுதியாக இயக்குனர் வினோத் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் , அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” படமும் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடியது.
அதுமட்டும் இல்லாமல் இந்த படம் வசூல் ராஜாவாக திகழ்ந்து. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் கூட்டணியில் அஜீத் குமார் நடிப்பில் ‘வலிமை’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது .இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல்களும் வெளியாகின. அதே போல இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : நான் என்ன பார்க்கிறேன் என்று தெரிகிறதா. ரைசா புகைப்படத்திற்கு ரசிகர்களின் கமெண்டை பாருங்க.
இந்த படத்தில் அஜித் அவர்கள் தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ரொம்ப ஸ்லிம்மா மாறி இருக்கிறார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், அவருடைய லுக் பார்ப்பதற்கு வேற லெவெல்ல இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் நம்ம அஜித் அவர்கள் பழையபடி கருமையான முடி வைத்து உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.அதனை உறுதி செய்யும் விதமாக அஜித்தின் சில புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் நடிகர் அஜித் வேதாளம் படத்தில் வருவது போல மொட்டை அடித்துக்கொண்டு சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். அதே போல தாடியை முழுவதும் நீக்கி மீசையை இறக்கி விட்டுள்ளார். ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் அஜித் கருமை முடியில் இளமை தோற்றத்தில் இருந்தார். ஆனால், இந்த புகைப்படத்தில் வேறு கெட்டப்பில் இருப்பதால் இந்த படத்தில் அஜித் இரண்டு கதாபாத்தரித்திலோ அல்லது இரண்டு கெட்டப்பில் நடிக்கிறாரோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.