பரத்தை போன்ற உடலை கேட்டார் தல.! அஜித்தின் பயிற்சியாளர் சொன்ன சூப்பர் தகவல்.!

0
15343
Ajith-Trainer
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் டயட் பிளான், பிட்னஸ் போன்ற பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் பிரபல பிட்னஸ் பயிற்சியாளரான சிவா. இவர் தமிழ் சினிமாவில் அர்ஜுன், பரத், அருண் விஜய், லாரன்ஸ் போன்ற பல நடிகர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளாள்ர் சிவகுமார்.

-விளம்பரம்-

தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் ஹோல்டரான இவர், மிஸ்டர் தமிழ் நாடு, மிஸ்டர் மெட்றாஸ் போன்ற பல பட்டங்களை வென்றுள்ளார். இவர் தமிழ் சினிமா நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணிபுரிய துவங்கியது அர்ஜுன் நடித்த துரை படத்தின் மூலம் தானாம். துரை படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இவரது உடலை பார்த்துவிட்டு தனக்கு உடற்பயிற்சிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : அபிராமி மற்றும் மீராவிற்கும் என்ன தொடர்பு.! இந்த புகைப்படம் மற்றும் விடியோவை பாருங்க புரியும்.!

- Advertisement -

அந்த படத்தில் துவங்கி தற்போது வரை தமிழில் உள்ள பல்வேறு நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மேலும், பரத் நடித்த ‘555’ படத்தில் பரத் சிக்ஸ் பேக் உடலை வைக்க காரணமும் இவர் தான். இந்த நிலையில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் சிவகுமார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகுமார், அவரை போன்ற ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை. நான் அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது என்னை கண்டதும் என் காரை திறந்துவிட்டார் அஜித். அவர் ஆரம்பம், படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் அப்படிபட்டது. அவருக்கு அத்தனை சிகிச்சை செய்த பிறகும் அவர் அதை பற்றி கவலை படாமல் ஒர்க் அவுட் செய்வார்.

-விளம்பரம்-
Image result for Physical Trainer Sivakumar

மேலும், ஒரு முறை பரத் என்ன சாப்பிடுகிறார் அதை நானும் டயட்டாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். பரத் என்ன சாப்பிட்டாரோ அதே தான் அஜித்தும் சாப்பிட்டார். பரத் போன்று தனக்கும் சிக்ஸ் பேக் வேண்டும் என்று மெனக்கெட்டர் அஜித். அதே போல அவருக்கு த்ரட் மில்லில் ஓடுவது சுத்தமாக பிடிக்காது. மாறாக அவர் வால்கிங் செல்வார்.

Advertisement