தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று தான் அழைப்பார்கள். நடிகர் அஜித் மற்றும் ஷாலினிக்கு அனோஷ்கா என்ற அழகான மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை.
அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். விஸ்வாசம் படத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அஜித் தன் மகள் மீது அதிக அன்பு கொண்டவர்.
இதையும் பாருங்க : டேன்ஸிங் ரோசுடன் ஒப்பிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை கலாய்கும் நெட்டிசன்கள் (சரியான குசும்புபா)
இந்த நிலையில் நடிகர் அஜித் தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தனது மகளுக்காக சைக்கிள் டயரை உருட்டி ஓடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அஜித் எந்த அளவிற்கு பைக் மற்றும் காரை ஓட்டுவார் என்பது தெரியும். ஆனால், மகளுக்காக சற்றும் கௌரவம் பார்க்காமல் அஜித் இப்படி டயர் உருட்டி இருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது சமூக வலைதளத்தில் இந்த வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இறுதியாக அஜித், விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து தற்போது எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.