இளமையாக இருக்கும் தல அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரல்.

0
639

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அஜித்துக்கு நடிப்பை தாண்டி கார்,பைக் என்றால் மிகுந்த ஆர்வம், அதே போல அஜித் ஹெலிகாப்டர் கூட ஒட்டியுள்ளார் என்ற தகவல் கூட இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : நாஞ்சில் விஜயனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் – சூர்யா வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு சர்வதேச அளவில் 2-வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகது.இந்த எந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கிருமிநாசினி தெளிக்க இயலும். இதுபோன்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் நான்கு ட்ரோன் எந்திரங்கள் உள்ளன என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்த நடிகர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் பழைய வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அஜித் சற்று இளமையாக இருக்கிறார். அப்போதே ஏரோ மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி உள்ளார் அஜித்.

-விளம்பரம்-
Advertisement