அவர் கொடுத்த செக்கை அஜித் இன்று வரை போட்டு பணம் எடுக்கல – இயக்குனர் சொன்ன ஆச்சரியமான விஷயம். வீடியோ இதொ.

0
1743
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-
20yearsofamarkalam hashtag on Twitter

ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. ஆனால், இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது காதல் மன்னன் திரைப்படம் தான். ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாய் என்ற இருந்த பெயரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது இயக்குனர் சேரன் தான் இயக்குனர் சேரன், அஜித்தை வைத்து காதல் மன்னன் அமர்க்களம் அட்டகாசம் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். அமர்க்களம் படத்தின் போது தான் அஜித் மற்றும் ஷாலினிக்கு காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : இரண்டாம் கணவருடன் லிப் லாக் மற்றும் பிக்கினி உடையில் பிரபல Vj பூஜா. இவர் முதல் கணவர் யார் தெரியும்ல.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சரண், தனது படத்திற்காக அஜித் சம்பளமே வாங்காமல் நடித்த காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், காதல் மன்னன் படத்தின் ரிலீஸின்போது ஒரு 98 காட்சிகள் போட்டிருந்தோம் ஆனால் யாரும் அந்த படத்தை வாங்க முன்வரவில்லை அஜித் நடித்த 6 படங்கள் சரியாக போகவில்லை ஆனால் தயாரிப்பாளரை பொருத்தவரை இந்த திரைப்படம் நன்றாக வர வேண்டும் என்று நிறைய செலவுகளை செய்து விட்டார் ஆனால் செலவு செய்த தொகையை கடன் பெற்ற தொழுகைக்கும் நிறைய இடித்தது.

அது போக படம் ரிலீசுக்கு தள்ளிப்போனது மேலும் அழகாய் இருக்கும் கொஞ்சம் பணம் பிடித்தது இதனால் நடிகர் அஜித்குமார் படத்தை வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு பயனாக இருக்கும் என்று கூறிவிட்டார், அப்போது என்னிடம் அமர்க்களம் என்ற டைட்டில் மட்டும்தான் இருந்தது. அவசர அவசரமாக அந்த படத்தின் போஸ்டரை தயார் செய்து வெளியிட்டு இதை வைத்து ஒரு கதையை தயார் செய்து விடுவோம் என்று அமர்க்களம் படத்தின் விளம்பரத்தை வெளியிட்டோம்.

-விளம்பரம்-

இந்தப் படமும் ரிலீசானது படம் வாங்கியவர்களுக்கும் நல்ல பணம் கிடைத்தது. ஆனால், காதல் மன்னன் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் தயாரிப்பாளருக்கு கடன் தொல்லை எல்லாம் ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் அவரை சமாதானம் செய்து அமர்க்களம் படத்தை எடுத்து முடித்தோம். படமும் நன்றாக ஓடியது. ஆனால், அமர்க்களம் படத்திற்காக தயாரிப்பாளர் கொடுத்த சம்பள செக்கை அஜித் போட்டு பணம் எடுக்கவே இல்லை. காதல் மன்னன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை இந்த படம் கொடுத்துவிட்டதா வச்சிக்கோங்க என்று கூறிவிட்டு, இன்று வரை அந்த செக்கை போடவில்லை அஜித் என்று கூறியுள்ளார் சரண்.

Advertisement