அஜித் பிறந்தநாள், காமன் ‘டிபி’ வெளியிடுவதாக இருந்த 14 பிரபலங்களுக்கு அஜித் வேண்டுகோள்.

0
3039
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாஸ். தல அஜித்தின் படம் திரையரங்களில் வெளியாகுவது என்று சொன்னாலே போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. வலிமை படத்தின் படப்பிடிப்பை மிக ரகசியமாக நடித்தி வருகிறார் இயக்குனர். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் வரப்போகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

- Advertisement -

தல அஜித்தின் பிறந்த நாள் அன்று ரசிகர்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு கமெண்டுகளும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தல அஜித்தின் பிறந்த நாளை திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதோடு சோசியல் மீடியாவில் தல பிறந்தநாளன்று புதியதாக ஹாஸ்டேக் உருவாக்கி பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

மேலும், தல அஜித்தின் பிறந்த நாளில் அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ் , பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி என்று 14 சினிமா பிரபலங்கள் சேர்ந்து the common DP (Display Picture) வெளியிடுவதாகவும் இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் நாடே கொரோனா பாதிப்பால் ஸ்தம்பித்து கிடக்கும் வேலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று காமன் டிபியை வெளியிடுவதாக இருந்த 14 பிரபலங்களுக்கு அஜித் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துளளதாம். இதுகுறித்து சாந்தனு பாக்யராஜ் மற்றும் இயக்குனர் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

,

Advertisement