‘துணிவில்லாமல் புகழ் இல்லை’ – மாஸ் வசனத்துடன் வெளியான ‘AK61’ படத்தின் பர்ஸ்ட் லுக்.

0
817
Thunive Thunai
- Advertisement -

அஜித் நடித்து வரும் AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது.

அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான வேடத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஓய்வில் அஜித்குமார் இமயமலை பகுதியில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. கார்கில் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செய்தார். பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்றும் வழி பட்டார்.

-விளம்பரம்-

தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளார். பாங்காக்கில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் அஜித்தின் 61-வது படத்துக்கு துணிவே துணை என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் பரிசீலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அதில் துணிவு என்று படத்திற்கு பெயர் வைக்கப்ட்டு இருக்கிறது.

அதில் கையில் துப்பாக்கியுடன் முழு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் இருக்கிறார் அஜித். மேலும், படத்தின் டைட்டிலுக்கு கீழ் இருக்கும் ஸ்லோகனில் ‘No Guts No Glory’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. துணிவே துணை தலைப்பில் 1976-ல் ஜெய்சங்கர் நடித்த படம் வெளியானது. அந்த படத்திலும் ஜெய் ஷங்கர் போலீஸ் அதிகாரியாக தான் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement