தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.
படங்கள் :
மேலும், தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரா தப்பட்டை’ விஷால் நடிப்பில் வெளியான “மருது” போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தினை விஜய் நடிப்பில் வெளியான ‘சர்க்கார்’ படத்திற்கு போட்டியாக வெளியிறிருந்தார் ஆர் கே சுரேஷ். ஆனால், பில்லா பாண்டி படம் பெரும் தோல்வி அடைந்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் ஆர் கே சுரேஷ். பின்னர் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஆர் கே சுரேஷ் ‘வன்முறை’ என்ற படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு வேட்டை நாய், விசித்திரன், விருமான், பட்டத்து அரசன் போன்ற பல படங்களில் நடித்து விட்டார்.
இரண்டாவது திருமணம் :
பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் லதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து கடந்த வருடம் டிசம்பர் 22ஆம் தேதி வளைகாப்பு நடத்து. ஆர்.கே. சுரேஷின் மனைவி மாதவி சுரேஷுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இரண்டாவது குழந்தை :
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் நடிகர் கௌதம் கார்த்திக் நடிகர் விமல் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்கே சுரேஷ் மற்றும் அவரது மனைவியை வாழ்த்தியிருந்தார்கள். இந்த நிலையில் தான் தற்போது இந்த தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் ஆர்.கே சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.
மூச்சு விடுவதில் சிரமம் :
அந்த பதிவில் அவர் எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது ஆனால் அந்த குழந்தை துரதிஷ்ட வசமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் கடவுள் அருளால் குழந்தை தற்போது நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முதல் மனைவி பற்றிய தகவல் :
நடிகர் சுரேஷ் ஏற்கனவே முதல் திருமணம் செய்து பல காலங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்து விட்டார். அதோடு அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் அவர் பெயர் கவின். கவின் அவரது தாயுடன் தான் வளர்ந்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகவும், அவருக்கு எதாவது தேவை என்றால் அதனை செய்து வருவதாகவும் கூறினார். மேலும் அடிக்கடி தானும் கவினும் சந்தித்து வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியது குறிப்பிடதக்கது.