அஜித்தை வைத்து 4 படங்களை எடுத்த சிறுத்தை சிவாவை கேலி செய்தாரா வினோத் – இந்த காட்சிய நீங்களே பாருங்க.

0
581
ajith
- Advertisement -

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நேர்கொண்ட வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

100 ஆண்டு சாதனை படைத்த வலிமை :

அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளிலேயே விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது. அதோடு தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 900க்கும் அதிகமான திரையரங்களில் வலிமை படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோர் படங்கள் கூட 700 முதல் 800 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்.

சிவாவை கேலி செய்தாரா வினோத் :

ஆனால், வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ரிலீசாகி தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை செய்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் சிறுத்தை சிவாவை கேலி செய்து காட்சி ஒன்று இடம்பெற்று இருப்பதாக ரசிகர்கள் கிளப்பிவிட்டுள்ளனர். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா.

-விளம்பரம்-

சிறுத்தை சிவா :

சிறுத்தை படத்திற்கு முன்பாவே தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார் சிறுத்தை சிவா. ஆனால், அந்த இரண்டு படங்களும் அட்டர் பிளாப். அதே போல சிறுத்தை படமே தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியான Vikramarkudu படத்தின் ரீ – மேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கி இருந்தார்.

வலிமை படத்தின் சில்மிஷ சிவா காட்சி :

அந்த படத்தை தொடர்ந்து வேதாளம், விவேகம் விசுவாசம் என்று அஜித்தை வைத்து மட்டுமே படத்தை இயக்கி வந்தார். ஆனால், இவரது விவேகம் மற்றும் வேதாளம் படம் பெரும் கேலிக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தில் ‘சில்மிஷ சிவா’ கதாபாத்திரம் சிறுத்தை சிவாவை கேலி செய்வது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில்மிஷ சிவா இந்த படத்தின் 3 முறை வந்து தன்னுடைய பெயரை அறிமுகம் செய்துகொள்வார். அது சிறுத்தை சிவா அஜித்தை வைத்து தொடர்ந்து படம் எடுத்ததை கேலி செய்வது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கிளப்பிவிட்டுள்ளார்கள்.

Advertisement