ரஜினியின் 2.0 வை ஓரம் கட்டிய அஜித்தின் ‘விஸ்வாசம் ‘ மோஷன் போஸ்டர்..!

0
997
Visvasam2.0
- Advertisement -

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’அடுத்த பொங்கல் பண்டிகை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வசம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு முதன் முறையாக அஜித் படத்தில் இசையமைக்கவுள்ளார் இசை அமைப்பாளர் இமான்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று(நவம்பர் 25) இரவு இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினியின் ‘2.0’வை விட அதிக பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Visvasam

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை 2.74 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது. மேலும், இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட மோஷன் போஸ்டர் என்ற பெருமையையும் படைத்துள்ளது.

Advertisement