பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட EPSக்கு போனில் வாழ்த்து தெரிவித்துள்ள அஜித் – என்ன காரணம் தெரியுமா ?

0
358
Eps
- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அஜித் அவர்களின் தந்தை காலமாகி இருக்கும் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அஜித் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆனால், இவருடைய தந்தை தமிழ், தாய் சிந்தி. இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் ஆவார். அதில் அஜித் இரண்டாவது மகனாகப் பிறந்தார். கராச்சி பார்ட்டிஷன் போது அஜித்தின் அம்மா அங்கிருந்து வந்துவிட்டார்கள். பின் அஜித் தந்தை வேலை ட்ரான்ஸ்பர் போது ஹைதராபாத்திற்கே வந்துவிட்டனர். அதற்கு பின்னர் இவர்கள் சென்னைக்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட்து. அஜித்தின் தந்தை சுப்ரமணி. இவர் ஒரு பிராமின்.

- Advertisement -

அஜித் குடும்பம் குறித்த தகவல்:

இவர் அசைவம் சாப்பிட மாட்டார். அதனால் தங்கள் பிள்ளைகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னது கிடையாது. அவர்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட அவர் அனுமதித்து கொடுத்து இருக்கிறார் என அஜித்தின் சகோதரர் அனில்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்ரமணி கடந்த வாரம் காலமாகி இருக்கும் சம்பவம் அஜித் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அஜித் தந்தை இறப்பு:

2019 ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அஜித் தந்தை சென்னையில் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். ஆனால், சில தினங்களுக்கு முன் அவர் அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84. அஜித் தந்தையின் இறப்பிற்கு முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை மறைவிற்கு தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

எடப்பாடிக்கு வாழ்த்து சொன்ன அஜித்:

அப்போது அஜித் அவர்கள் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதாவது, சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இறுதியில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் கட்சி தொண்டர்கள் எடப்பாடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆர் போல கண்ணாடியையும், தொப்பியையும் அவருக்கு மாட்டி விட்டு எங்களின் சின்ன எம்ஜிஆர் என்றெல்லாம் தொண்டர்கள் பதிவிட்டு தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி டீவ்ட்:

அஜித் குமாரின் தந்தை இறந்த போதே டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர் போட்ட பதிவில் ‘ தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement