மிரட்டினாரா ஏஜிஆர் ? சிம்பு,கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
713
Pathuthala
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிம்பு. சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் பல எதிர்பார்ப்புகளுடன் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல. இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. நீண்ட எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் சிம்புவின் பத்து தல படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சிம்பு அவர்கள் ஏஜிஆர் என்ற டான் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து இந்த படம் கதை நகர்கிறது. தமிழ்நாட்டினுடைய முதல்வர் சந்தோஷ் பிரபுதாப். இவருக்கும் அவருடைய அண்ணன் கௌதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் சந்தோஷ் கடத்தப்படுகிறார். பின் முதல்வர் காணாமல் போய்விடுகிறார் என்ற செய்தி வெளியானவுடன் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்படுகிறது.

- Advertisement -

இதனால் தற்காலிக முதல்வராக ஏ ஜி ஆரின் விசுவாசி கிருஷ்ணா பொறுப்பேற்கிறார். ஏ ஜி ஆர் சிம்பு மணல் கடத்தலில் ஜாம்பவானாக திகழ்கிறார். பின் முதல்வர் கிருஷ்ணா, ஏ ஜி ஆர் சிம்புவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் கௌதமுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரியான கௌதம் கார்த்திக் சிம்புவை கைது செய்ய பல சம்பவங்களை செய்து ஏஜிஆரின் ஆட்களில் ஒருவராக மாறுகிறார்.

இறுதியில் முதல்வர் என்ன ஆனார்? கௌதம் கார்த்திக் நிலைமை என்ன? சிம்பு உடைய திட்டம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் மணல் கடத்தல் ஜாம்பவானாக ஏஜிஆர் கதாபாத்திரத்தில் சிம்பு மிரட்டி இருக்கிறார். சிம்புவினுடைய நடிப்பு தூள் கிளப்பு இருக்கிறது. படத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மத்தியில் கிளாப்சை ஏற்படுத்தி இருக்கிறது. வில்லனாக கௌதம் மேனன் மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவரை அடுத்து பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து கௌதம் கார்த்தியும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.
அதிகாரப் போட்டியும், அதிகார மையத்தின் ஆளுமையையும் மையமாக வைத்து இந்த கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு தேர்வு செய்த கதாபாத்திரங்களும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. அதேபோல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் செய்திருக்கிறது.

ஆனால், படத்தில் சிம்புவை இடைவெளிக்கு பிறகு அறிமுகப்படுத்தி இருப்பதால் குறையாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிம்புவின் கதாபாத்திரம் காண்பிக்கப்பட்டிருந்தால் வேற லெவலில் இருந்து இருக்கும். மேலும், படத்தில் பல இடத்தில் இயக்குனர் காண்பித்திருக்கும் ட்விஸ்ட் வேற லெவல். இரண்டாம் பாதியில் வரும்ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் அருமை. முதல் பாதி மிக வேகமாக சென்று இருக்கிறது. மொத்தத்தில் சிம்புவின் பத்து தல ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறைகள் :

சிம்புவின் நடிப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

கதைக்களம் அருமை

கிளைமேக்ஸ் காட்சி சூப்பர்

ஸ்டண்ட் காட்சிகள் வேற லெவல்

இரண்டாம் பாதி அமர்க்களம்

குறைகள் :

முதல் பாதி விரைவாக சென்றது

இடைவெளிக்கு பிறகு சிம்புவை காண்பித்திருப்பது குறையாக இருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் சிம்புவின் பத்து தல- கெத்து தல

Advertisement