அஜித் குடும்பத்தை பார்த்திருப்பீங்க. ஷாலினி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.

0
194987
ajith-shalini
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சாலினி. அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை ஷாலினி அவர்கள் 1979 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியில் பிறந்தார்.

-விளம்பரம்-

மேலும்,நடிகை ஷாலினியின் அப்பா பெயர் பாபு, அம்மா பெயர் அலிஸ் ஆகும். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட் ஆகும். இவர்கள் ரெண்டு பேரும் கூட சினிமா உலகில் பிரபலம் ஆனவர்கள். அதோடு நடிகை ஷாலினிக்கு பேட்மிட்டன் விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவர். ஷாலினி அவர்கள் முதன் முதலில் ‘ஓசை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின் பந்தம்,பிள்ளை நிலா,விடுதலை,சங்கர் குரு,ராஜா சின்ன ரோஜா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.இப்படி நடிகை ஷாலினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தாலும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது தளபதி விஜய் அவர்களின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் தான். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே வெற்றி பெற்றது.

இதையும் பாருங்க : உறுதியானதா கமல் படத்தின் வாய்ப்பு ? கமலின் புதிய அலுவலகத்தில் தர்ஷன். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து நடிகை ஷாலினி அவர்கள் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்து அஜித் அவர்களின் 25 வது படமான “அமர்க்களம்” படத்தில் நடித்து உள்ளார். ஷாலினி, அஜித் குமார் இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்திற்கு பிறகு அஜித் குமார் அவர்கள் ஷாலினியிடம் உங்களை காதலிக்கிறேன்என்று கூறினார். பின் ஷாலினியும் எங்கள் வீட்டில் வந்து பேசுங்கள் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து அஜித்தும்,ஷாலினியும் இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுடைய கல்யாணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2008இல் அனுஷ்கா என்ற அழகான பெண் குழந்தையும், 2015ம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது உள்ளார்கள். பின் அவர் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி அவர்கள் முழு வேலையையும் தன் குடும்பத்தை கவனிப்பதிலேயே அதிக நேரம் செலுத்தி வந்தார். இதனைத்தொடர்ந்து நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலியை எல்லாருக்குமே தெரியும். இவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். அது துர்கா, தைப்பூசம், எங்க பாப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளவர். அதே மாதிரி தான் நடிகர் ரிச்சர்ட் அவர்களும் தெலுங்கு மொழியிலும், தமிழ் மொழியிலும் பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஷாலினியின் குடும்ப புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement