உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை – விஜய்யின் லியோ வெற்றிவிழா பேச்சு குறித்து ராஜேஸ்வரி பிரியா.

0
375
- Advertisement -

பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அவரது படங்கலின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு தான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறும் குட்டி ஸ்டோரி தான் இந்த விழாவில் ஹைலைட்டாக அமையும் அந்த வகையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருந்ததால் லியோ படத்தின் இசை நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருந்தது.

-விளம்பரம்-

இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி பெரும் வைரலாகி வருகிறது. மேலும், இந்த விழாவில் சில சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்தார். அந்த வகையில் நான் ரெடி தான் பாடல் சர்ச்சை குறித்து பேசிய விஜய் பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு… விரல் இடக்குலனு ஒரு வரிய தூக்கினாங்க.

- Advertisement -

அதை ஏன் சிகெரட்ன்னு நினைக்கிறீங்க… அதுல தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம்… அண்டால குடுக்கிறது கூழ்ழாக கூட இருக்கலாம். இது மாதிரி மலுப்பலான பதில நான் சொல்லலாம். ஆனா சினிமாவை சினிமாவா பாருங்க. ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயங்கள் வச்சாங்க. அதெல்லாம் நீங்க எடுத்துக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும். ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.

அவங்க என்ன ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு போறாங்களா. அவங்கெல்லாம் ரொம்ப தெளிவு’ என்று பேசி இருந்தார். லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் துவங்கி ட்ரைலர் வரை சர்ச்சையை கிளப்பிய ராஜேஸ்வரிக்கு தான் விஜய் இப்படி பதிலடி கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராஜேஸ்வரி பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் ‘சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார். தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை.

லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள். மக்களை ஆணையிட சொன்னீர்கள் .நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை. மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement