அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா குறித்து நடிகை ஆலியா பட் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கிரஷ்ஷாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். மேலும், டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. படத்தில் தன்னுடைய தந்தை மீது மகன் ஒருவன் அதிக பாசம் வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய தந்தையின் அன்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வதே படத்தின் கதை.
அனிமல் படம்:
இதில் மகனாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அவருடைய தந்தையாக அணில் கபூர் நடித்திருக்கிறார். ரன்பீர் கபூர் சிறுவயதிலிருந்தே இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக அணில் கபூர் இருக்கிறார். இவர் தன்னுடைய மகனை எதற்கெடுத்தாலும் பயங்கரமாக திட்டுகிறார். ஆனால், தன்னுடைய தந்தை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவர் மீது அதிக அன்பை கொட்டுகிறார் ரன்பீர் கபூர்.
படத்தில் ராஷ்மிகா:
தந்தை மகனுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. கதைக்களமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமாக இல்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு படத்தில் ராஸ்மிகா மந்தனா பயங்கர கிளாமராக நடித்து இருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
மேலும், இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அனிமல் படம் குறித்து நடிகையும், ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட் பட குழுவினரை பாராட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று போட்டு இருக்கிறார்.
ஆலியா பட் பதிவு:
அதில் அவர், சந்தீப் ரெட்டி வங்கா, உங்களை போல் யாரும் இல்லை. இந்தப் படத்தில் வருபவை அதிர்ச்சியூட்டுகிறது, ஆச்சரியப்பட வைக்கிறது. கூஸ்பம்ஸாகவும் இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, படத்தில் மிக அழகாகவும் நேர்மையாகவும் இருக்கிறீர்கள். அந்த காட்சியில் உங்களை நான் ரசித்தேன். ரொம்ப ஸ்பெஷலாகவும் இன்ஸ்பைரிங்காகவும் இருந்தது என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.